ராமர் கோயில் திறப்பு விழாவிலும் குடியரசு தலைவர் புறக்கணிப்பு?

Sinoj
வெள்ளி, 5 ஜனவரி 2024 (13:21 IST)
அயோத்தியில் ராமர் கோயிலுக்கு எனத் தனியாக அறக்கட்டளை தொடங்கப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டு கோவில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு  நிறைவடைந்துள்ளது.
 

ஜனவரியில் கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல அரசியல் பிரமுகர்களும், விவிஐபிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த    நிலையில்,  அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியின்  அறிவுரையின்படி, கும்பாபிஷேகப் பெருவிழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், இவ்விழா அழைப்பிதழில் பிரதமர் நரேந்திரமோடி, ராஷ்டிரிய சேவா சங்- ஸ்ரீ மோகன் பகவத் ஜி,  குஜராத் கவர்னர் ஆனந்தி பென் படேல், உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத்  உள்ளிட்டோரின் பெயர் இடம்பெற்றுள்ள நிலையில்  ராமர் கோயில் திறப்பு விழாவிலும் குடியரசு தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே புதிய நாடாளுமன்ற கட்டடதிறப்பு விழாவிலும் குடியரசு தலைவர் அழைக்கப்படவில்லை. தற்போது ராமர் கோயில் திறப்பு விழாவிலும் குடியரசுத் தலைவர் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்