என்ன வந்துகிட்டே இருக்காய்ங்க! ரெடி மிக்ஸ் வண்டியில் எஸ்கேப் ஆன தொழிலாளர்கள் #WebViral

Webdunia
சனி, 2 மே 2020 (15:53 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நூதனமான முறையில் சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற தொழிலாளர்களை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் வெளிமாநில தொழிலாளிகள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அனுமதித்தால் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிமாநில ஊழியர்கள் பலரும் நடந்து செல்வது, சைக்கிளில் செல்வது என பல வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் சென்ற கான்கிரீட் சிமெண்ட் கலவை கொண்டு செல்லும் வாகனத்தை போலீஸார் சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் சிமெண்ட் மிக்ஸிங் டேங்கிற்குள் 18 நபர்கள் மறைமுகமாக பதுங்கி சென்று கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து லக்னோவிற்கு இவ்வாறாக மறைந்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ட்ரக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சிமெண்ட் கலவை டேங்கிற்குள்ளிருந்து வரிசையாக தொழிலாளிகள் இறங்கி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்