பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்செல் மண்டேலா ஆகிய வெகு சில உலக தலைவர்கள் மட்டுமே அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசியிருக்கும் நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அதுவும் இரண்டாவது முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங், வாஜ்பாய், நரசிம்மராவ், ராஜீவ் காந்தி ஆகியோர் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்திய நிலையில் தற்போது பிரதமர் மோடி இரண்டாவது முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூட்டு கூட்டத்தில் பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் எதிர்காலம், இந்தியாவின் தொலைநோக்கு பார்வை, இந்திய அமெரிக்க நாடுகள் எதிர்கொண்டுள்ள உலகளாவிய சவால்கள் ஆகியவை குறித்து பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.