ஒடிஷாவில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி இரவில் பெங்களூரு- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்- சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், மற்றும் சரக்கு ரயில் 3 ரயில்களும் விபத்தில் சிக்கியது. இதில், 275 பேர் உயிரிழந்தனர். 1000 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
ரயில் விபத்து நடைபெற்ற இடத்திற்கு பிரதமர் மோடி, ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வித்துறை தர்மேந்திர பிரதான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்த நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஓடிஷா மாநிலம் கட்டாக் மற்றும் புவனேஷ்வர் நகரங்களுக்கு நான் மீண்டும் செல்வேன்.