தன்னை கத்தியால் குத்தியது பற்றி புத்தகம் எழுதும் சல்மான் ருஷ்டி

சனி, 3 ஜூன் 2023 (21:55 IST)
இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தளர் சல்மான் ருஷ்டி கடந்த 1988 ஆம் ஆண்டு எழுதிய தி சாத்தானிக் வெர்சஸ் என்ற புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து  சில   நாடுகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொலைமிரட்டல்கள் விடுத்தன.

இந்த  நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி பங்கேற்றபோது, அவரை ஒரு வாலிபர் கத்தியால் குத்தினார்.

இத்தாக்குதலில் அவர் கண்பார்வை இழந்துள்ளார். இந்த சம்பவத்திற்குப் பின்  கடந்த 20 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

அப்போது, அவர் தன் மீதான கத்திக்குத்து தாக்குதல் பற்றி புத்தகம் எழுதப் போவதாகக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்