ஆக்ஸிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவு !

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (17:03 IST)
கொரோனா இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உயிர்காக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் 50000 மெட்ரிக் டன் கையிருப்பு உள்ளதாகவும், தினசரி 7 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அது மேலும் அதிகமாக்கப்படும் எனவும் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

எனவே, சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்

இந்நிலையில், இந்தியாவிலேயே மஹராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மஜாராஷ்டிர மாநிலத்தில் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக மாநில அரசு தெரிவித்த நிலையில் 100 டன் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இலவசமாகத் தருவதாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் கூறியது.

இந்நிலையில், நாடு முழுவதும் சிலிண்டர் உற்பதியை அதிகரிக்க வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: நாட்டில் உள்ளா அனைத்து ஆக்‌ஷிஜன் நிலையங்களிலும் அதன் கொள்ளவுக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். ஆக்‌ஷிஜன் சிலிண்டர்கள் நிரப்பும் நிலையங்கள் 24 மணிநேரமும் செயல்பட அனுமதி அளிப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்