பீகார் மாநிலத்தில் இருட்டுக்குள் நடத்தப்பட்டுள்ளது பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு.
பீகார் மாநிலம் மோதிஹரி என்ற பகுதியில் நேற்று மாலை பிளஸ்-2 தேர்வுக்கான பொதுத்தேர்வு நடந்தது. அப்போது, தேர்வு மையத்தில் போதிய வெளிச்சம் இல்லை என்பதால், அங்கு நிறுத்தப்பட்டுள்ள காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைப் பயன்படுத்தி பல மாணவர்கள் தேர்வு எழுதினர்.
மேலும், பிற்பகல் 1:45 மணிக்கு நடக்க வேண்டிய தேர்வு மாலை 4:30 மணிக்கு நடந்தது குறிப்பிடத்தக்கது.