சீனாவைவிட வடகொரியா திறமைவாய்ந்தது: பினராயி விஜயன்!!

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (16:34 IST)
அமெரிக்கா வடகொரியா ஆகிய இரு நாடுகளுக்கு மத்தியில் அமைதியற்ற சூழல் நிலவி வரும் நிலையில், கேரள முதலைமச்சர் பினராயி விஜயன் வடகொரிய அரசிற்கு ஆதரவாக தனது கருத்தை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
கோழிக்கோட்டில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில்தான் வடகொரியா அரசிற்கு ஆதரவாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது, வடகொரியாவும், அமெரிக்காவும் ஒருவரை ஒருவர் அணு ஆயுத தாக்குதல் நடத்துவதாக கூறி  மிரட்டி வருகின்றனர்.
 
வடகொரியா அமெரிக்காவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. அமெரிக்காவால் ஏற்படுத்தபட்ட அழுத்தத்தை வடகொரியா எதிர்கொள்வதில் வெற்றி பெற்று உள்ளது. இதில் சீனாவை விட வடகொரியா சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.
 
மேலும், நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு சீனாவால் ஏகாதிபத்திய சக்திகளை எதிர்க்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். வடகொரியாவை ஆதரிக்கும் வகையில் கேரள முதல்வர் பேசியுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இத்ர்கு முன்னர், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட கூட்டத்திற்கான விளம்பர பலகையில் வடகொரிய அதிபரின் படம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்