யெஸ் பேங்க் நிதி சிக்கலால் முடங்கிய PhonePe!!

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2020 (11:21 IST)
யெஸ் பேங்க் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதால் போன் பே பாதிப்படைந்துள்ளது. 
 
தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வரும் நிலையில் அதன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் தற்போது கொண்டுவந்துள்ளது.
 
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘யெஸ் பேங்க்’ ரிசர்வ் வங்கியின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், கடுமையான கடன்சுமையில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் யெஸ் பேங்க்கின் நிர்வாகக் குழு முழுமையாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுவதாகவும், யெஸ் பேங்க்கினை நிர்வாகம் செய்ய எஸ்பிஐ வங்கியின் முன்னாள் அலுலரான பிரசாந்த் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இதனால் பண பரிவர்த்தனைகளில்ல் கெடுபிடி விதிக்கப்படுள்ளதால் யெஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், யெஸ் பேங்குடன் கூட்டு வைத்துள்ள போன்பே, பாரத்பே ஆகிய செயலிகளின் சேவைகளும் பாதிப்படைந்துள்ளன.
 
போன்பே செயலில் தற்காலிகமாக சேவை இல்லை. மன்னிக்கவும், விரைவில் சேவையை வழங்குவோம் என்று தனது வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்