லிப்ட் நகரத்துவங்கியதும் விளக்குகளை அனைத்து அந்த பெண், சிறுமியை கடுமையாக தாக்க துவங்கியுள்ளார். வலி தாக்க முடியாத சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால், லிப்டில் இருந்து சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட குடியிருப்புவாசிகள் உடனடியாக லிப்ட்டை நிறுத்தியுள்ளனர்.
பின்னர் சிறுமியை அடித்த அந்த பெண்ணுக்கு பலத்த அடிக்கொடுத்துள்ளனர். பிறகு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அந்த பெண் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அந்த பெண் எதற்காக சிறுமியை அடித்தார் என்பது தெரியவில்லை.