சென்னையில் உள்ள புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சிறுமி, அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். குறிப்பிட்ட நாளில் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை தெரிந்துக்கொண்டு பக்கத்து வீட்டுக்காரரான ஆட்டோ டிரைவர் விஜி தாமஸ், சிறுமியின் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.
உள்ளே நுழைந்தது, சிறுமியின் கைகளை துப்பட்டாவால் கட்டிபோட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது சிறுமி கத்தி கூச்சலிட்டதால் சிறுமியின் வாயில் சோப் ஆயிலை ஊற்றியுள்ளார். அப்போது சிறுமி நிலை தடுமாறியதால் பயத்தில் ஓடி விட்டார்.