சபரிமலைக்கு வந்த பெண்கள் மீது பெப்பர் பொடி வீச்சு: இருவர் கைது

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (10:39 IST)
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை வழிபடலாம் என சுப்ரீம் கோர்ட் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பிலும் சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு தடை விதிக்கவில்லை என்பதால் இந்த ஆண்டும் பெண்கள் பலர் சபரிமலைக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளனர்
 
இருப்பினும் பெண்கள் சபரிமலைக்கு செல்வதை அனுமதிக்க கூடாது என்று ஒரு சில இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் சபரிமலைக்கு வரும் பெண்களை அவர்கள் தடுத்தும் வருகின்றனர்.
 
இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த சமூகப் போராளி திருப்தி தேசாயும் அவருடைய தோழிகள் நால்வரும் சபரிமலைக்குச் செல்ல கொச்சிக்கு வந்தனர். அவர்கள் கொச்சியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தாங்கள் சபரிமலை செல்ல இருப்பதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரி மனு ஒன்றை அளித்தனர். அதன் பின்னர் காவல் நிலைய ஆணையர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது திடீரென அங்கு வந்த ஐயப்ப கர்ம சமிதி அமைப்பைச் சேர்ந்த இருவர் அந்தப் பெண்கள் மீது மிளகாய் பொடி மற்றும் பெப்பர் பொடியை தூவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த வீடியோ பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 
 
இதனை அடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து கர்ம சமிதி அமைப்பினர்களை கைது செய்து சபரிமலைக்கு செல்லும் பெண்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்
 
பக்தியின் அடிப்படையில் இல்லாமல் உரிமையின் அடிப்படையில் சபரிமலைக்கு சென்று தீருவோம் என்று பெண்கள் ஒருபுறமும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் பெண்களை சபரிமலையில் அனுமதிக்க முடியாது என்று ஒரு சில அமைப்பினர் இன்னொரு புறமும் இருப்பதால் சபரிமலையில் தொடர்ந்து பதட்டநிலையில் உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்