சபரி மலை கோயிலுக்கு செல்ல கேரளா வந்தார் பெண்ணிய போராளி..!!

Arun Prasath
செவ்வாய், 26 நவம்பர் 2019 (10:22 IST)
சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல கேரளாவிற்கு வருகை தந்துள்ளார் மஹாராஷ்டிராவை சேர்ந்த பெண்ணிய போராளி திருப்தி தேசாய்.

கடந்த 2018 ஆம் ஆண்டு சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நிலையில் பல பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைய முற்பட்டனர். ஆனால் ஆண் பக்தர்கள் போராட்டம் காரணமாக அனைத்து பெண்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். அந்த பெண்களில் பெண்ணிய போராளி திருப்தி தேசாயும் ஒருவர்.

சமீபத்தில் சபரிமலை விவகாரம் குறித்தான மறுசீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 7 அமர்வு நீதிபதிகளுக்கு மாற்றி உத்தரவிட்டது. அதுவரை முந்திய நிலையே தொடரும் என கூறப்பட்டது.

மேலும் சபரிமலைக்கு வரு பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது எனவும் கேரளா அரசு குறியது. இந்நிலையில் தற்போது மீண்டும் திருப்தி தேசாய் சபரிமலைக்கு செல்ல கேரளாவின் கொச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
விமான நிலையத்தில் நிரூபர்களை சந்தித்த தேசாய், ‘இன்று அரசியலமைப்பு நாள். என்னை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்தால் நான் நிச்சயமாக நீதிமன்றம் செல்வேன்” என கூறீயுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பரிதாப தோல்வி அடைந்ததற்கு சபரிமலை விவகாரம் தான் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்