சாலையை கடந்து செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலைகளின் சுரங்கப்பாதையை அனைவரும் பயன்படுத்துவதை போலவே மெட்ரோ ரயில் பயணிகள் மட்டுமின்றி அனைவரும் மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதையை பயன்படுத்தலாம் என்றும் அதற்கு கட்டணம் எதுவும் பாதசாரிகளிடம் வசூல் செய்யப்பா மாட்டாது என்றும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மெட்ரோ ரயில் உயரதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதையை பாதசாரிகள் பயன்படுத்தலாம். கட்டணம் வாங்குவார்கள்? என்ற பயத்தில் பலர் அதை பயன்படுத்துவதில்லை. ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் 2 விதமான வழிகள் இருக்கின்றன. இந்த 2 வழிகளிலும் சுரங்கப்பாதை இருக்கிறது. இதை பாதசாரிகள் பயன்படுத்தலாம்.
சுரங்கப்பாதையில் இறங்குவதற்கு படிக்கட்டும், ஏறுவதற்கு எஸ்கலேட்டர் வசதியும் இருக்கிறது. டிக்கெட் கவுண்ட்டரை தாண்டி ரெயில் நிலைய நடைமேடைக்கு செல்வதற்கு மட்டும் தான் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தை சுரங்கப்பாதையை தவறாக பயன்படுத்தும் நோக்கத்த்ஹில் வெகுநேரம் நிற்கக்கூடாது. அதை கண்காணிப்பு கேமரா மூலம் நாங்கள் கண்காணிப்போம்' என்று கூறியுள்ளார். இது சென்னை உள்பட நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளுக்கும் பொருந்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.