பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் ஆந்திராவில் புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை இறுதி செய்துள்ளது
ஆந்திர பிரதேசத்தில் எதிர்வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து கூட்டணி தொகுதி பங்கீடு செய்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
மொத்தம் உள்ள 25 மக்களவை தொகுதியில் மூன்று மக்களவைத் தொகுதியில் ஜனசேனா கட்சியும் 22 மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசமும் போட்டியிடும். அதேபோல் 175 சட்டப்பேரவை தொகுதியில் 25 சட்டப்பேரவை தொகுதிகள் ஜனசேனா கட்சிக்கும் 150 சட்டப்பேரவை தொகுதிகள் தெலுங்கு தேசம் கட்சிக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது
இது குறித்த ஒப்பந்தத்தில் பவன் கல்யாண் மற்றும் சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.