ஆபரேஷன் கங்கா மூலம் மீட்கப்பட்ட பாகிஸ்தான் பெண் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 14 நாட்களுக்கும் மேலாக போர் தொடர்ந்து உள்ள நிலையில் உக்ரைனில் சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் மக்கள் பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் நாடி செல்கின்றனர். வெளிநாட்டு மக்கள் உக்ரைன் எல்லை வழியாக பிற நாடுகளுக்கு சென்று அங்கிருந்து சொந்த நாடு திரும்பி வருகின்றனர்.
உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியர்களுடன் உக்ரைனில் சிக்கியிருந்த பாகிஸ்தான் பெண் ஒருவரையும் இந்திய அரசு மீட்டுள்ளது.
ஆஸ்மா ஷபிக்யூ என்ற அந்த பெண் கூறுகையில் “உக்ரைனில் மிகவும் கடுமையான சூழ்நிலையில் சிக்கித்தவித்த என்னை மீட்பதில் உதவிய கீவ்வில் உள்ள இந்திய தூதரகத்த்ற்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எங்களை ஆதரித்ததற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.