வாகா எல்லையில் இனிப்பு வழங்காத பாகிஸ்தான் – காஷ்மீர் விவகார எதிரொலி !

Webdunia
புதன், 14 ஆகஸ்ட் 2019 (14:10 IST)
காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் முடிவால் வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்காமல் கொண்டாடியுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து வருகிறது. இதனால் பாகிஸ்தனில் இருந்த இந்தியத் தூதரையும் திருப்பி அனுப்பி, வர்த்தக உறவையும் தற்காலிகமாக ரத்து செய்தது. டெல்லி, லாகூர் இடையே சென்ற பஸ் போக்குவரத்தையும் நிறுத்தியது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து ஐ.நா.வுக்குக் கடிதம் எழுதியது.

இந்நிலையில் இன்று பாகிஸ்தானின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக வாகா எல்லையில் இந்திய ராணுவத்தினருக்கு இனிப்புகளை வழங்கி சுதந்திர தினக் கொண்டாட்டங்களை பாகிஸ்தான் மேற்கொள்ளும். தற்போது உள்ள நிலையில் பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டு ராணுவம் சார்பில் இந்திய வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படவில்லை. இதையடுத்து நாளை இந்திய ராணுவம் சார்பில் இனிப்புகள் வழங்கப்படுமா எனத் தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்