மோடி பறக்கத் தடை விதித்த பாகிஸ்தான் !

Webdunia
திங்கள், 28 அக்டோபர் 2019 (10:24 IST)
சவுதி அரேபியா செல்வதற்காக பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்த இந்திய பிரதமர் மோடிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு நாளை செல்ல இருக்கிறார். அங்கு நடைபெறும் எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் மூன்றாவது அமர்வில் கலந்து கொள்கிறார். எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் மூன்றாவது அமர்வில் கலந்து கொள்கிறார். இந்த சந்திப்பில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களின் போது தனி விமானத்தில் செல்வதுதான் வழக்கம். சவுதி அரேபியா செல்வதற்காக அவர் பாகிஸ்தான் மார்க்கமாக செல்ல இருந்தார். ஆனால் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி இந்திய உயர் அதிகாரி ஒருவருக்கு எழுத்துபூர்வமாக அறிக்கை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தியத் தலைவர்கள் செல்லும் விமானங்களுக்குத் தங்களது வான்வழியைப் பயன்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து தடைபோட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்