ஜொமைட்டாவில் ஒரு பிரியாணி விலை ரூ.2500... போதைப்பெண்மணிக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவம்

திங்கள், 23 ஜனவரி 2023 (16:56 IST)
போதையில் பெண்மணி ஒருவர் பிரியாணியை ஆர்டர் செய்த நிலையில் அந்த பிரியாணியின் விலை ₹2500 என்று வந்ததை பார்த்து அந்த போதையிலும் அதிர்ச்சி அடைந்துள்ளார். 
 
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் போதையில் பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு ஜொமைட்டாவில் ஆர்டர் செய்தார். அவரது ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டு ரூபாய் 2500 அவரது அக்கவுண்டில் இருந்து கழிந்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்தஅவர் ஒரு பிரியாணி விலை ரூ.2500ஆ என அதிர்ச்சி அடைந்து பார்த்த பிறகு தான் தனது தவறை உணர்ந்திருக்கிறார்
 
மும்பையில் இருந்த அவர் பெங்களூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரியாணி ஆர்டர் செய்ததால் பெங்களூரில் இருந்து மும்பைக்கு கொண்டு வருவதற்கான செலவையும் சேர்த்து  2500 ரூபாய் கட்டணம் பெறப்பட்டுள்ளது.
 
இது குறித்து அவர் தனது தவறை உணர்ந்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்