ஜிஎஸ்டியை புரிந்துகொள்ளவே முடியவில்லை; பாஜக அமைச்சர் கருத்து

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (17:09 IST)
ஐஎஸ்டி வரிமுறையை புரிந்துகொள்ள இயலவில்லை என பாஜக அமைச்சர் ஓம் பிரகாஷ் துர்வே கூறியது பெரும் சர்ச்சையாகி உள்ளது.


 

 
மத்தியப் பிரதேச மாநில பாஜக அமைச்சர் இன்று போபாலில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசினார். அபோது அவர் ஜிஎஸ்டி வரி குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
அவர் கூறியதாவது:-
 
ஐஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை தம்மால் இதுவரை புரிந்துகொள்ள இயலவில்லை. ஜிஎஸ்டியை புரிந்துகொள்வதில் கணக்கு தணிக்கையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கும் கூட சிரமம் உள்ளது என்றார். 
 
இன்று கவுகாத்தியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்ற நிலையில் இவரது கருத்து பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்