ஓட்டுநர் முஸ்லிம் என்பதால் ஓலாவை கேன்சல் செய்தேன் - விஸ்வ இந்து பரிஷத்தை சேர்ந்தவருக்கு ஓலா பதிலடி

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (10:42 IST)
ஓலா கேப் ஓட்டுநர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்பதால், புக்கிங்கை கேன்சல் செய்தேன் என்ற விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினரின் ட்வீட்டிற்கு ஓலா நிறுவனம் பதிலடி அளித்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நான் மோடியை ஆதரிக்கிறேன் என்ற அணிக்காக விருது பெற்றவர் அபிஷேக் மிஸ்ரா. இவர் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவில் உள்ளார்.
 
இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் ஓலா கால் டாக்ஸியை புக் செய்ததாகவும், ஓட்டுநர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்பதால், தன்னுடைய பணத்தை ஜிகாதி மக்களுக்கு அளிக்க விரும்பவில்லை என்பதால் புக்கிங்கை ரத்து செய்துவிட்டேன் என மத சாயம் பூசி ஒரு சர்ச்சை ட்வீட்டை பதிவிட்டார். இந்த பதிவானது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது.
அபிஷேக் மிஷ்ராவின் ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள, ஓலா நிறுவனம் நமது நாடு மதசார்பற்றது எனவும் ஓலா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்கள், பங்கீட்டாளர்கள், ஓட்டுனர்களின் ஜாதி, மதத்தை பாகுபாடு படுத்தி பார்ப்பதில்லை எனவும் ஓலா நிறுவனம் எல்லா ஓட்டுநர்களிடம் எல்லோரையும் சமமாக பாருங்கள் எனவும் அறிவுறித்துள்ளதாக அபிஷேக் மிஸ்ராவிற்கு பதிலடி அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்