ஊடகங்கள் தான் எங்களை குற்றவாளியாக சித்தரித்துவிட்டனர் - சீமான் ஆவேசம்

சனி, 14 ஏப்ரல் 2018 (16:34 IST)
நாங்கள் கலவரத்தில் ஈடுபடவில்லை எனவும், ஊடகங்கள் தான் எங்களை குற்றவாளி போல் சித்தரித்து விட்டது எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் மக்கள் போராடி வருகின்றனர். தமிழ் சினிமா துறையினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
 
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிராக அண்ணா சாலையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பாரதிராஜா, வைரமுத்து, சீமான், திரு.முருகன் காந்தி, சீமான், அமீர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது சிலர் போலீஸாரை தாக்கினர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு காரணமே நாம்தமிழர் கட்சி தான் என ஊடகங்களில் செய்தி வெளியாகியது. 
செய்தியாளர்களிடம் பேசிய சீமான், எங்கள் கட்சி ஆட்கள் ஒருபோதும் இப்பேற்பட்ட செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்றும், அந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், ஊடகங்கள் தான் எங்களை குற்றவாளி போல் சித்தரித்து விட்டது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஊடகங்களும் காவல் துறையும் எங்கள் மீது அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்