தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (13:42 IST)
இந்தியாவில்  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள  காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பானை இன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் தலைமையின் கீழ் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் தேசியமாக்கப்பட்ட வங்கிகளில் Probationary Officers  பதவிகளுக்கான 3,049 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வங்கி பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தகுதி  உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதிக்குள் https://www.ibps.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்