முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் இனி கிடையாது: அதிரடி அறிவிப்பு!

Webdunia
புதன், 5 அக்டோபர் 2022 (14:39 IST)
முக கவசம் அணியாதவர்களுக்கு இனி அபராதம் கிடையாது என்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரத்து செய்யப்படுவதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. 
 
டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் முக கவசம் அணியாமல் பொது இடங்களில் வருபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்து வருவதை அடுத்து முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த 500 ரூபாய் அபராதம் ரத்து செய்யப்படுகிறது என டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே காவல்துறை அதிகாரிகள் இனி முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் பெறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லி மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களிலும் தற்போது முகக்கவசம் அணியாதவர்களிடம்அபராதம்  பெறப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்