இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு: நுழைவுத்தேர்வும் கிடையாது!

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (18:16 IST)
இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு நுழைவுத்தேர்வு கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் வெளிநாட்டவர் படிப்பதற்கு 25% இடம் கூடுதலாக ஒதுக்கப்படும் என யுஜிசி தெரிவித்துள்ளது
 
ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டை விட அதிகமாக 25 சதவீதம் இட ஒதுக்கீடு என்று கூறியுள்ள யுஜிஐ  இந்தியாவில் இளநிலை முதுநிலை படிப்பு படிக்க வெளிநாட்டு மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை என்றும் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது 
 
வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்கள் காலியாக இருந்தால் அதில் வெளிநாட்டு மாணவர்களை தவிர வேறு யாருக்கும் ஒதுக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்