காங்கிரஸுடன் கூட்டணி இல்லை : பிரபல தலைவர் அதிரடி

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (15:29 IST)
சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர்கள் போட்டியிடும் 12 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம் என காங்கிரஸ் தெரிவித்தது, 
இந்நிலையில் எங்களுக்காக எந்த தொகுதிலும் காங்கிரஸ் தியாகம் செய்யத் தேவையில்லை என்று பதிலளித்துள்ளது.
 
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவை  தொகுதியில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இரண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு 3 இடங்கள் அளித்துள்ளார் சோனியா. மேலும் ராகுல் போட்டியிடும் ரேபரேலி அமேதி தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தாமல் இருகட்சிகளும் உள்ளன.
 
இதனால் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் சூழலில் உள்ளது.இதனடிப்படையிலேயே பிரியங்காவுக்க்கு காங்கிரஸ் பொதுச்செயலாளார் பதவியும் உ.பி கிழக்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராஜ்ப்பார் நேற்று அளித்த பேட்டியின் போது உத்திரபிரதேசட்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போட்டியிடும் 7 இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று தெரிவித்தார். 
 
ஆனால் இந்த அறிவிப்பை நிராகரிக்கும் விதத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டிவிட்டரில் இன்று பதிவிட்டுள்ளதாவது:
பகுஜன் சமாஜிற்கு காங்கிரஸ் கட்சியுட்ர்ன் எந்தக் கூட்டணியும் இல்லை. உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தங்கள் வேட்பாளர்களை நிறுத்திக் கொள்ளலாம். எங்களுக்காகா தியாகம் செய்ய தேவையில்லை என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்