மத்திய அமைச்சருக்கு இரண்டாவது முறையாக கொரோனா

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (07:59 IST)
மத்திய அமைச்சர் ஒருவருக்கு கடந்த ஆண்டு ஏற்கனவே கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களுக்கு கடந்த ஆண்டு கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மீண்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக கொரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் பரிசோதனை செய்தபோது பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து தனிமையை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
 
மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பீகார், கர்நாடக முதல்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு ஒரு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்