பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி மும்பையில் திறந்துள்ள கலாச்சார மையத்திற்கு உலக பிரபலங்கள் வந்து கலந்து கொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பல தொழில்கள் மூலம் பிரபலமான தொழிலதிபராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீடா அம்பானி தற்போது மும்பையில் பிரம்மாண்டமான கலாச்சார மையம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கான பிரம்மாண்டமான தொடக்க நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்தி நடிகர்கள் ஷாரூக்கான், சல்மான்கான், அமிதாப் பச்சன் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். பிரபல தமிழ் நடிகர் ரஜினிகாந்தும் இந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டார். பட்டியல் இதோடு நிற்கவில்லை. பிரபல ஹாலிவுட் சூப்பர்ஹீரோ படமான ஸ்பைடர்மேனில் நடித்த டாம் ஹாலண்ட், ஸெண்டாயா உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த தொடக்க விழாவின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.