கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டு தொடர்பு உள்ளதா? என்ஐஏ தீவிர விசாரணை..!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (08:03 IST)
கேரள மாநிலம் களமசேரி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கை, என்ஐஏ ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
குண்டு வைத்ததாக ஒப்புக்கொண்டுள்ள டொமினிக் மார்ட்டின் நீண்ட காலம் வெளிநாட்டில் பணிபுரிந்தவர் என்பதால், பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
குண்டுவெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு உள்ளதா என என்ஐஏ, என்எஸ்ஜி போன்ற விசாரணை அமைப்புகள் விசாரணை செய்து வருகின்றன. 
 
முன்னதாக கேரளாவின் களமசேரி பகுதியில் நடந்த ஜெபக் கூட்டத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டது என்றும், இந்த சம்பவத்தில் சிறுமி உள்பட 3 பேர் பலியாகியுள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.
 
ஜெபக் கூட்டத்தில் வைக்கப்பட்ட டிபன் பாக்ஸ் வெடிகுண்டை 2 மணி நேரமாக யாரும் கண்டுகொள்ளவில்லை மற்றும் சந்தேகப்படவில்லை என டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வைத்த டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. களமசேரி குண்டு வெடிப்புக்கு பயன்படுத்திய வெடிகுண்டை டொமினிக் மார்ட்டின் தன்னந்தனியாகத்தான் தயாரித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்