ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

திங்கள், 30 அக்டோபர் 2023 (10:24 IST)
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்றும்,  ஆளுநர் மாளிகைக்கு வெளியே தெருவில்தான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது  என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
மதுரையில் இன்று தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவில் மரியாதை செலுத்தி விட்டு பேசிய போது  முதல்வர் ஸ்டாலின் மேலும் கூறுகையில், ‘ஆளுநர் மாளிகையில் இருந்து பொய் தகவல் பரப்பப்படுகிறது என்றும், ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக மாறி வருகிறது எனவும் குற்றஞ்சாட்டினார்.
 
முன்னதாக பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன் கிராமத்திற்கு முதல்வர் வருகை தந்து, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதையை முதல்வர் ஸ்டாலின் செலுத்தினார்.
 
மேலும் தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்தியது திமுக அரசு என முதல்வர்  ஸ்டாலின் பெருமிதம் கொண்டார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்