மஞ்சள் கோட்டை தாண்டினால் இலவசம்??! – சுங்க சாவடிகளில் புதிய விதிமுறை!

Webdunia
வியாழன், 27 மே 2021 (12:57 IST)
இந்தியா முழுவதும் உள்ள சுங்க சாவடிகளில் புதிய விதிமுறைகளை பின்பற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடிகள் பல செயல்பட்டு வரும் நிலையில் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் மணி கணக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் சம்பவங்கள் தினம்தோறும் நடைபெறுகின்றன.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுக்கு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி சுங்க சாவடியின் இரு வழிகளிலும் 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் நிறத்தில் கோடு போட வேண்டும். சுங்க கட்டணம் செலுத்த வரும் வாகனங்கள் மஞ்சள் கோட்டை தாண்டியும் நீண்ட வரிசையில் நின்றால் அவற்றை கட்டணமின்றி செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த விதிமுறைகளை சுங்கசாவடி ஒப்பந்ததாரர்கள் ஏற்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்