ஓட்டுநர் உரிமம் தொடர்பான புதிய நடைமுறை

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (16:06 IST)
வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் தொடர்பான புதிய நடைமுறை அமலுக்கு வரும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளதாவது:

அங்கீகாரம் பெற்ற பள்ளியில் பயிற்சி முடித்துச் சான்று பெற்றிருந்தால் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

மேலும், ஆர்.டி.ஓ அலுவலகங்களில் தனியாக ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறியுள்ளது.

இந்தப் புதிய நடைமுறை மக்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அவர்களின் நேரம் மிச்சப்படும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்