பாலியல் குற்றவாளிகளுக்கு மூன்றே வாரத்தில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசின் அதிரடி மசோதா

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (20:24 IST)
பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்துவிட்டு இனிமேல் வருடக்கணக்கில் தப்பிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நிர்பயா கொலையாளிகள் உள்பட பலர் பாலியல் குற்றவாளிகள் வருடக்கணக்கில் தண்டனை அனுபவிக்காமல் தப்பிக் கொண்டிருப்பதால் சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 
ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டரில் போட்டுத் தள்ளியது போல், பாலியல் குற்றவாளிகள் அனைவரையும் போட்டுத்தள்ள வேண்டும் என்ற மன நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சரியான நேரத்தில் கிடைக்காத நீதி, கிடைக்காத நீதிக்கு சமம் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது 
 
இந்த நிலையில் சமீபத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் பாலியல் குற்றவாளிகளின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்றே வாரத்தில் தூக்கு தண்டனை கொடுக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படும் என்று ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் இது குறித்த சட்ட மசோதா என்று ஆந்திர சட்டசபை தாக்கல் செய்யப்பட்டது 
 
இதனை அடுத்து இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் இனிமேல் பாலியல் குற்றம் சாட்டுபவர்கள் மீது ஒரே வாரத்தில் விசாரணை முடிக்கப்பட்டு அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்றாவது வாரத்தில் தூக்கு தண்டனை அளிக்கும் வகையில் இந்த சட்ட மசோதாவில் வழிவகை செய்வதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆந்திரா அரசை பின்பற்றி மற்ற மாநில அரசுகளும் இதேபோன்று சட்ட மசோதாவை ஏற்படுத்தினால் தான், நாட்டில் பாலியல் குற்றங்கள் குறையும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்