கருவை ஸ்கேன் செய்ததில் அலட்சியம் – ரூ. 50 லட்சம் அபராதம்

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (17:55 IST)
கேரளம் மாநிலத்தில் இடுப்பிற்கு கீழே வளர்ச்சியின்றி குழந்தை பிறந்ததால், பெற்றோருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள பத்தனம்திட்டாவில் இடுப்புக்குக் கீழே வளர்ச்சியின்றி குழந்தை  பிறந்துள்ளது.

இந்த நிலையில், கர்ப்ப காலத்தில் 4 முறை ஸ்கேன் செய்தும் கரு நல்ல முறையில் வளர்ச்சியில் உள்ளது எனக் கூறிய நிலையில், குழந்தை வளர்ச்சியின்றி பிறந்ததால், வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம்,  2015 ஆம் ஆண்டு குழந்தை பிறந்ததைக் கணக்கிட்டு வட்டியுடன் இழப்பீடு செலுத்த உத்தரவிட்டுள்ளது.

எனவே பெற்றோருக்கு ரூ.82 லட்சம் வரை நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்