நீட் மறுதேர்வில் பங்கேற்காத மாணவர்களிடம் விசாரணை: சிபிஐ அதிரடி

Mahendran
திங்கள், 24 ஜூன் 2024 (14:54 IST)
நேற்று நடைபெற்ற நீட் மறுதேர்வில் 50% மாணவர்கள் பங்கேற்கவில்லை என்றும், மறு தேர்வில் பங்கேற்காத மாணவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என சிபிஐ கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை குவித்த மாணவர்கள், மறு தேர்வில் பங்கேற்காதது ஏன்? தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு முறைகேட்டில் தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் சிபிஐ விசாரணை செய்ய இருப்பதாகவும், இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
நேற்று 1563 மாணவர்களுக்கு நீட் மறு தேர்வு நடந்த நிலையில் அதில் 750 பேர் பங்கேற்கவில்லை என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 1563 மாணவர்களும் நல்ல மதிப்பெண் எடுத்திருந்த நிலையில் அவர்கள் ஏன் மறுதேர்வில் பங்கேற்கவில்லை என்பதை எடுத்து இதில் பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது
 
அதிக மதிப்பெண்களை மாணவர்கள் எடுத்திருந்தால் அவர்கள் மீண்டும் மறு தேர்வில் கலந்து கொண்டிருக்கலாமே என்றும் அவர்கள் தேர்வில் பங்கேற்காததால் அவர்களுக்கும் இந்த முறைகேட்டிருக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிபிஐ விசாரணைக்கு பின்னர் இன்னும் சில உண்மைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்