நீட் தேர்வு; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – தேசிய தேர்வு முகமை!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (16:38 IST)
மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் மருத்துவ படிப்புகளில் சேர நுழைவு தேர்வான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு செப்டம்பர் 12ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்காக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்டு 6 ஆக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் விண்ணப்பிக்கும் தேதியை ஆகஸ்டு 10 வரை நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்