’வடை போச்சே’ – ஒலிம்பிக்கில் பங்கேற்க நம் நாட்டு நம்பிக்கை நட்சத்திர வீரருக்கு தடை

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (09:50 IST)
கடந்த ஜூன் 25-ல் இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவிற்கு (26)  ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டதில், அவர் தடைசெய்யப்பட்ட 'மெட்டாடியனன்' என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது உறுதியானது.
 

 

இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் நர்சிங் யாதவின் பெயர் நீக்கப்பட்டது. பின்னர், ”நர்சிங் மீது எந்த தவறும் இல்லை. விடுதியில் வழங்கப்பட்ட உணவில்தான் ஊக்கமருந்து கலந்துள்ளது. அவர் அதை தெரியாமல் தான் உட்கொண்டுள்ளார்’’ என்று இந்திய ஊக்கமருந்து தடுப்பு முகமை நர்சிங் யாதவை ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதியளித்தது. 

இந்நிலையில், நர்சிங் யாதவ் விளையாட தடைவிதிக்ககோரி சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை, உலக விளையாட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது. இதில், சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம், நர்சிங் யாதவிற்கு 4 ஆண்டுகள் வரை சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

2010 டெல்லி காமன்வெல்த் போட்டியில் தங்கமும், 2014 ஆசிய விளையாட்டில் வெண்கலமும் வென்ற நர்சிங் யாதவ், இன்று 74 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்த போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்