தமிழர்களின் உணர்வுகளுக்கே முதலிடம் - மோடி நிகழ்ச்சியை புறக்கணித்த நாராயணசாமி

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (14:26 IST)
பிரதமர் மோடி கலந்து கொண்ட சென்னை நிகழ்ச்சியை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புறக்கணித்துள்ளார்.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்து தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த இரு மாநிலங்களிலும் ஏராளமான போராட்டங்கள் நடந்து வருகிறது.
 
இந்நிலையில், சென்னை திருவிடந்தையில் ராணுவ கண்காட்சியை திறந்து வைக்க இன்று மோடி சென்னை வந்துள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இதில் அவர் கலந்து கொள்ளவில்லை.
 
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நாராயணசாமி “தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை. தமிழகம், புதுச்சேரி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும் நிகழ்ச்சியை புறக்கனித்தேன். மக்களின் எதிர்ப்பை உணர்ந்து காவிரி வாரியத்தை மோடி அமைக்க வேண்டும்” என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்