”எனது தலை அவமானத்தால் தொங்குகிறது” - மோடியின் வசனம்!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2016 (20:45 IST)
490 கோடி செலவில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மத்திய சிறுகுறு நடுத்தர தொழில்துறையின் கீழ் தேசிய எஸ்.சி.,எஸ்.டி. மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.


 
 
அப்போது மோடி பேசியதாவது, ''சமுதாய முரண்பாடு காரணமாக, நமது தலித் சகோதரர்கள் மீது இன்றும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. இதைக் கேள்விப்படும்போது எனது தலை அவமானத்தால் தொங்குகிறது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, இனியும் நாம் காத்திருக்கக்கூடாது. நாம் நமது இலக்கை நோக்கிய கவனத்தை இன்னும் கூர்மைப்படுத்த வேண்டும். தலித் அல்லது பழங்குடியின மக்களின் அபிலாஷைகள் நாட்டின் மற்ற இளைஞர்களை விஞ்சும் அளவுக்கு உள்ளது.
 
அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், சிறந்த நிலையை எட்டுவார்கள். தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த மையமானது, தலித் மற்றும் பழங்குடியினர் தொழிலதிபர்களாக உருவாக உதவி செய்யும். அதன்மூலம் அவர்கள் மற்றவர்களுக்கு வேலை வழங்க முடியும்'' என்றார்.
அடுத்த கட்டுரையில்