இன்று ஒரு திடுக்கிடும் தகவல். சுப்பிரமணியன் சுவாமியின் பரபரப்பு டுவீட்

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2017 (05:17 IST)
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது தனது டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருபவர். சமீபத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டு, மற்றும் சசிகலா-ஓபிஎஸ் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.



இந்நிலையில் நேற்று அவர் தனது டுவிட்டரில்,  நான் நாளை (அதாவது இன்று) ஒரு விஷயத்தை வெளியே சொல்ல உள்ளேன். அது ஒரு அரசியல்வாதியாக இருக்க கூடும். அவர் மீதான விசாரணைக்கு பின்னர் மேலும் ஒருவரை கையில் எடுக்க உள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமியிடம் மாட்டியுள்ள அரசியல்வாதி திமுக, அதிமுகவா என டுவிட்டர் பயனாளிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. ஆனால் கண்டிப்பாக ஒரு பெரிய தலை உருளப்போகின்றது என்பது மட்டும் நிச்சயம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அடுத்த கட்டுரையில்