நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் பிரதமராகவுள்ள நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் அணிய பிரத்யேக உடையை மும்பையை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தயாரித்துள்ளார்.
பாஜக வின் பிரதமர் வேட்பாளர் மோடி விரைவில் நாட்டின் பிரதமராக பதிவு ஏற்கவுள்ள நிலையில், அவரது பதவியேற்பு விழாவுக்கான சிறப்பு உடையை மும்பையை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரான சாய் சுமன் என்ற பெண் தயாரித்துள்ளார்.
சிட்னியில் நடைபெற்ற ஆடை வடிவமைப்பு கண்காட்சியில் பங்கேற்ற போது, மோடிக்கான இந்த பிரத்யேக ஆடையை வடிவமைக்கும் எண்ணம் தோன்றியதாகவும், உடனடியாக மும்பைக்கு திரும்பி ஜோத்பூரி வகை உடையை வடிவமைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த உடையை குறித்து தெரிவித்த அவர், நான் மோடி பயன்படுத்தும் ஆடை வகைகளை பல நாட்களாக கவனித்து வருகிறேன், நான் இந்த உடையின் உபயோகித்திருக்கும் வண்ணங்கள் அவருக்கு பிடிக்குமென நம்புகிறேன். இந்த உடையில் கைவேலைப்பாட்டில் உருவாக்கப்பட்ட பட்டன்கள் உள்ளன அவற்றில் பாஜக வின் சின்னமான தாமரையின் உருவம் உள்ளது.
மோடி பதவி ஏற்பதற்கு முன்னர் இந்த உடையை அவருக்கு பரிசாக அளிக்க விரும்புகிறேன் எனத் தெரிவத்துள்ளார்.