பிரதமர் மோடி இந்தியாவின் ஆன்மா, அவரை தோற்கடிக்க முடியாது: அமைச்சர் சுரேஷ் காதே

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (10:06 IST)
பிரதமர் மோடி இந்தியாவின் ஆன்மா என்றும் அவரை தோற்கடிக்க முடியாது என்றும் மத்திய அமைச்சர் என்று சுரேஷ் காதே அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல் சமீபத்தில் அளித்த பேட்டியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்கள் கட்சி தலைவர் சரத்பவார் மற்றும் அவரது உறவினர்களை தோற்கடிக்கவே முடியாது என்று கூறினார் 
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் காதே கூறியபோது, ‘பிரதமர் மோடி இந்தியாவின் ஆன்மா என்றும் அவரை தோற்கடிக்க முடியாதவர்தான் சரத்பவார் என்றும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இந்திரா காந்தி ஆகியோர் காலத்தில் சரத்பவார் தோல்வி அடைந்தார் என்றும் ஆனால் பிரதமர் மோடி ஒருபோதும் தோற்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்
 
 முன்னாள் பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல்கே அத்வானி அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று தோல்வி அடையாதவராக உள்ளார். அதேபோல் மோடியும் தோல்வியையே கண்டிராதவர் என்றும் அவரை தோற்கடிக்க இந்தியாவில் யாரும் இல்லை என்றும் அவர் இந்தியாவின் ஆன்மா என்றும் அவர் மக்களின் இதயங்களில் இருக்கிறார் என்றும் சுரேஷ் காதே தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்