அரிசி, நெல் ஏற்றுமதிக்கு 20% வரி! விலை உயருமா? மக்கள் பீதி!

வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (14:18 IST)
இந்தியாவில் அதிகளவில் அரிசி உற்பத்தி செய்யப்படும் பீஹார், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மா நிலங்களில் மழைப்பொழிவு குறைந்துள்ளதால், வரும் மாதங்களில் அரிசு உற்பத்தி பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

எனவே உள் நாட்டு தேவை பாதிக்கப்படக்கூடாது என்ற  நோக்கில் மத்திய அரசு  அரிசு ஏற்றுமதிக்கு 20% வரி விதித்துள்ளது. புழுங்கல் அரிசிக்கும் பாமாயிலுக்கும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அரிசி ஏற்றுமதியில்  உலகளவில் இந்தியா 2 ஆம் இடத்திலுள்ளது. இந்த நிலையில்,  நடபாண்டில் நெல் சாகுபடி பரப்பளவு6 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் நாடு முழுவதும் 367. 55 லட்சம் ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது, இதனால் 2022-2023 ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தி பாதிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த  10 ஆண்டுகளி அரிசியின் விலை வ உயர்ந்துள்ளது, தமிழகத்தில் 26 கிலோ பொன்னி அரிசி மூட்டை ரூ.1200க்கு விற்பனை ஆனது. இதேபோல் மற்ற அரிசி ரகங்களின் விலையும் அதிகரித்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்