ஒரேக் கூட்டத்தில் மோடி & இம்ரான் கான் – ஐ நா பொதுக்குழு கூட்டத்தில் பேச்சு !

Webdunia
வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (13:41 IST)
செப்டம்பர் 27 ஆம் தேதி ஐநா அமர்வில் ஒரேக் கூட்டத்தில் மோடியும் இம்ரான் கானும் பேச இருக்கின்றனர்.

இந்தியப் பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக வரும் செப்டம்பர் 21 முதல் 27 ஆம் தேதி வரை அமெரிக்கா செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அவர் இறுதி நாளான ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில்  பங்கேற்க இருக்கிறார்.இரண்டாவது முறையாக மோடி பிரதமர் பதவியேற்ற பின் மோடி ஐ.நா. சபையில் உரையாற்றுவது இதுதான் முதல்முறை.

இந்த அமர்வில் பேசப்போகும் தலைவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் மோடி பேசி முடித்தவுடன் அவருக்கு அடுத்த படியாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச உள்ளார். காஷ்மீரில் 370 சிறப்புப் பிரிவை நீக்கியதைப் பாகிஸ்தான் கடுமையாக கண்டித்து வருகிறது. இது குறித்து உலக அளவில் கவனத்தை ஈர்க்க முயன்று வருகிறது. ஆனால் இந்தியாவோ எங்கள் உள் விவகாரங்களில் வேறு எந்த நாடும் தலையிட முடியாது எனக் கூறியுள்ளது. இதனால் அடுத்தடுத்து இரு நாட்டு பிரதமர்களும் உரையாற்றுவது உலக அளவில் கவனத்த ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்