ஆண்களுக்கே ரத்த அழுத்தம் அதிகம்: ஆய்வின் முடிவுகள்!!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (19:44 IST)
இந்தியாவில் நகரங்களில் வாழும் ஆண்கலுக்கே பெண்களைவிட அதிக அளவில் உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.


 
 
இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய ஊட்ட சத்து அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டது.
 
இந்த ஆய்வு நாட்டில் உள்ள 16 மாநிலங்களில் உள்ள மொத்தம் 1.72 லட்சம் பேரிடம் நடத்தப்பட்டது. இதன் முடிவில் பெண்களைவிட ஆண்களே அதிக அளவில் உயர் ரத்த அழுத்தத்தால் அவதிபடுகின்றனர் என தெரியவந்துள்ளது.
 
பெண்களுக்கு 26 சதவிகிதமும், ஆண்களுக்கு 31 சதவிகிதமும் உயர் ரத்த அழுத்தம் உள்ளது தெரியவந்துள்ளது. 
 
இதே போல, நீரிழிவு நோய் ஆண்களுக்கு 22 சதவிகிதமும், பெண்களுக்கு 19 சதவிகிதமும் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்