உக்ரைனில் இறந்த மாணவரின் உடல் இந்தியா வந்தது!

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (10:23 IST)
மாணவர் நவீனின் உடலை இந்தியா கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் உக்ரைனில் இருந்து நவீனின் உடல் இந்தியா வந்தது. 

 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல நகரங்களில் ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் பல நகரங்களை கைப்பற்றியுள்ளது.
 
உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கிய சமயம் உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வந்த கர்நாடகாவை சேர்ந்த நவீன் என்ற மாணவர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் மாணவர் நவீனின் உடலை இந்தியா கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் உக்ரைனில் இருந்து நவீனின் உடல் விமானம் மூலம் இந்தியா வந்தது. கர்நாடக மாநிலம் ஹவேரியில் உள்ள இல்லத்தில் நவீனின் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின் உடல் அரசு மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்படவுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்