இனி கிளினிக்குக்கு செல்ல வேண்டாம்… வந்துவிட்டது மெடிக்கல் ஏடிஎம் !

Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (09:19 IST)
58 வகையான மருத்துவப் பரிசோதனைகளை செய்வதற்காக மருத்துவ ஏ.ஹெச்.எம் மெஷின்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஏடிஎம் மெஷின்களில் பணம் எடுத்துகொள்வது போல இனி 58 வகையான மருத்துவ பரிசோதனைகளை நாமே செய்து கொள்ளும் ஏஹெச்எம் மெஷின்களை சான்ஸ்கிரிடெக் ஸ்மார்ட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற மருத்துவத் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதன் அறிமுக விழா நேற்று நடந்தது. இந்த எந்திரம் மூலம்  ரத்தத்திலுள்ள குளூக்கோஸ் அளவு, டெங்கு, ஹீமோகுளோபின், டைபாய்டு, ஹெச்ஐவி, மலேரியா, சிக்குன்குனியா, சிறுநீர் பரிசோதனைகள், ஈசிஜி, காது பரிசோதனை, தோல் பரிசோதனை உள்ளிட்டவைகளை நாமே கணினியின் உதவியுடன் செய்து கொள்ளலாம். தற்போது இந்த ஏஹெச்எம் இயந்திரம் இந்தூர், புவனேஷ்வர், குர்ஹான் ஆகிய நகரங்களில் தற்போது செயல்பட்டு வருகின்றன. விரைவில் இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்