தமிழகத்தில் போக்குவரத்து அபராதத் தொகை குறைப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

வியாழன், 19 செப்டம்பர் 2019 (14:00 IST)
இந்தியாவில்  பெருகிவரும் வாகன விபத்துக்களை குறைக்கும் பொருட்டு,  புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின்படி, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள்,  மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் விதிமுறை மீறிச் செல்பவர்களுக்கு மத்திய அரசு பலமடங்கு அபராதம் விதித்துள்ளது. நாட்டில் பல மாநிலங்களில் வாகனத்தைவிட அபராதத் தொகை அதிகம் என்பதால், வாகனத்தை விற்று, வானக ஓட்டிகள் அபராதம் செலுத்தி வருகின்றனர்.
அதாவது, புதிய போக்குவரத்து சட்டத்தில் 10 மடங்கு வரை அபராதத் தொகை  உயர்த்தப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் மக்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்துவந்த நிலையில் அந்தந்த மாநில அரசுகளே அபராதத் தொகையை குறைத்துக் கொள்ளலாம் என மத்திய போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்திருந்தார்.
 
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கூறியதாவது :
 
தமிழகத்தில் மோட்டார் வாகன விதிமீறல்களுக்கான அபராதம் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், தமிழகத்தில் புதிய சட்டம் அமலாக்கப்படாத நிலையில் தமிழக அரசு அபராதத் தொகையில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்