ஒரே தேதியில் பிறந்த மொத்த கிராமம்: உத்தர பிரதேசத்தில் அதிசயம்!!

Webdunia
ஞாயிறு, 21 மே 2017 (11:09 IST)
உத்தர பிரதேச அரசு அதிகாரிகள் செய்த சில தவறுகளால் ஒரு கிராம மக்களேயே அதிசயமாக பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.


 
 
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கஞ்ஜசா கிராமத்தில் ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் கார்டில் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் ஜனவரி 1 ஆம் தேதி பிறந்ததாக தேதி அச்சிடப்பட்டுள்ளது.
 
பள்ளி ஆசிரியை ஒருவர் கிராமத்தில் உள்ள மாணவர்களில் ஆதார் எண்ணை பதிவு செய்ய வந்துள்ளார். அப்போது, அனைவரின் ஆதார் கார்டிலும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி பிறந்தது போல பிறந்த தேதி அச்சடிக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்து புகார் அளித்தார்.
 
இதன் பின்னர் விரைவில் புதிய ஆதார் கார்ட் வழங்கப்படும் என்றும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்