அடுத்த முறை வரும் போது... மோடி நம்பிக்கை உரை!!

Webdunia
ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (12:01 IST)
கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் வீரர்களை போல போராடுகிறார்கள் என மோடி பேச்சு. 
 
மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று காலை நாட்டு மக்களிடையே பேசினார். அவர் கூறியதாவது, கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் வீரர்களை போல போராடுகிறார்கள். 
 
அரசின் ஒவ்வொரு துறைகளும் 24 மணிநேரமும் மக்களுக்கு உதவுவதற்காக செயல்பட்டு வருகிறது. அரசும், மக்களும் சேர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றனர். 
 
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . கொரோனாவில் இருந்து உலகம் மீண்டுவிட்டது என்ற நல்ல செய்தியுடன் அடுத்த முறை பேசுகிறேன் என கூறி விடைபெற்றார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்